முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய பாசனத்திற்காக மஞ்சாளாறு அணையிலிருந்து தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார்

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

தேனி,-தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து தமிழக அரசின் உத்தரவின்படி, முதல்போக சாகுபடிக்காக   மாவட்ட ஆட்சித்தலைவர்    ம.பல்லவி பல்தேவ்,  பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 100 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார்.
    தண்ணீரை திறந்து வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்   பேசுகையில்:-
   தமிழ்நாடு முதலமைச்சர்  ,  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உத்தவின்படி, மஞ்சளாறு அணையிலிருந்து பாசனத்திற்காக 143 நாட்களுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அக்டோபர் 24 முதல் டிசம்பர் 15 வரை 60 கன அடி வீதமும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 31 வரை 50 கன அடி வீதமும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 15 வரை 45 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
    அதேபோல், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அக்டோபர் 24 முதல் நவம்பர் 30 வரை 40 கன அடி வீதமும், டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 30 கன அடி வீதமும், மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை 20 கன அடி வீதமும் என மொத்தம் 1035.50 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும்.
      மேலும், இதனால்; தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களும்,; திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணவாய்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு 3386 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு 1873 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் குளங்களை தூர்வாருவதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணியினை உடனடியாக செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடியில் 54.9 அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து 71 கன அடியாகவும் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்;ளார்.
     இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி)  சி.தினேஷ்குமார்,  கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  .எஸ்.டி.கே.ஜக்கையன், செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) எ.குமார், உதவி செயற்பொறியாளர் ஆர்.தமிழ்செல்வன், உதவி பொறியாளர்கள் எ.சேகரன்,  கோகுலக்கண்ணன், ஆர்.கண்ணன், வட்டாட்சியர் ரத்தினமாலா மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து