முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் செல்கிறார்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜப்பானில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளார்.இந்தியா - ஜப்பான் நாடு களுக்கு இடையேயான வருடாந்திர மாநாடு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த மாநாட்டின்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே யுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இருதரப்பு உறவு, பிராந்திய பாதுகாப்பு, தீவிர வாதத்துக்கு எதிரான கூட்டு நட வடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து