முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறாவது படைவீடு சோலைமலை முருகன்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 8ம் தேதி தொடங்குகிறது.

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில் - மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன்கோவில் உள்ளது. இக்கோவிலில்  ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி  திருவிழாவும் ஒன்றாகும்.இந்தவிழா நவம்பர் மாதம் 8ம் தேதி காலையில்8.15மணிக்கு விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது. 9.45மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது பின்னர் 10 மணிக்கு அன்னவாகனத்தில் சாமிபுறப்பாடு நடைபெறும்.11.30மணிக்கு சண்முகஅர்சனை நடைபெறும்.9ம்தேதி காலையில் வழக்கம்போல்பூஜைகளும்,9மணிக்கு காமதேனு வாகனத்தில் சாமிபுறப்பாடும்நடைபெறும். 10ம் தேதி காலை 9மணிக்கு யானை வாகனத்தில் சாமி புறப்பாடு,11ம் தேதி காலையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சாமிபுறப்பாடு, 12ம் தேதி சப்பரவாகனத்தில் சாமிபுறப்பாடுநடைபெறும்.

     திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹரவிழா 13ம் தேதி நடைபெறுகிறது. அன்று குதிரை வாகனத்தில் சாமிபுறப்பாடும் நடைபெறும்.தொடர்ந்து மாலை 4.35 மணிக்கு வேல்வாங்குதல் நடைபெறும்.வெள்ளிமயில் வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளி ஈசானதிக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகாசூரனையும், ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் 5.40மணிக்கு பத்மாசூரனையும் சம்ஹாரம்செய்து சூரசம்ஹாரகாட்சி நடைபெறும். 14ம் தேதி காலை 10.20மணிக்கு மேல்10.30மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 4.30மணிக்கு ஊஞ்சல்சேவை,மஞ்சள்நீர்உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.முன்னதாக வள்ளிதெய்வானை சமேதசுப்பிரமணிய சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்களும்,தீபாராதனைகளும் நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து