முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை நடை திறப்பு சபரிமலையில் 144 தடை அமல்

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை,சபரிமலை ஐயப்பன் கோயில்நடை நாளை  5-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதையொட்டி,  சுமார் 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், விபரீதங்களைத் தடுக்கும் வகையில் எலவங்கல், பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானம் வரையில் மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு முதல் நவம்பர் 6ம் தேதி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதே போல, பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்டப் பகுதிகள் சிறப்புப் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவித்திருக்கும் கேரள காவல்துறை, அவற்றை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களும் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நவம்பர் 5ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதும், பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் போது, அவர்களைத் தடுக்கும் வகையில் யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து