முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகுந்த கவனத்துடனேயே ராணுவ தளவாட கொள்முதல்:அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ராணுவ தளவாடங்களுக்கான கொள்முதல் எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்பட்டுள்ள போதிலும், மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாதுகாப்புத் துறை புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சங்கத்தின் சார்பில் இந்திய பாதுகாப்பு மாநாடு-2018 என்ற நிகழ்ச்சி டெல்லியில்  நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு தளவாட உள்நாட்டு உற்பத்தியாளர்களிடையே பேசியதாவது:

இந்திய உற்பத்தி நிறுவனங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களை வாங்குமாறு ஆயுதப் படையினை நான் வலியுறுத்த இயலாது. இந்திய தயாரிப்பு தளவாடங்களை வாங்கக் கூடிய வகையில் ஆயுதப் படைகளின் நம்பிக்கையை உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தான் பெற வேண்டும். ஏனெனில் அந்தத் தளவாடங்களை முழுமையாக ஆயுதப் படைகளே பயன்படுத்துகின்றன.

ஆயுதப் படைகளை பயன்படுத்துவதற்கான காலம் வரும்போது, அவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தான் எனது பணியாகும். அவற்றின் தயார் நிலைக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. பாதுகாப்புத் துறை அமைச்சர்களாக எனக்கு முன்பு பதவி வகித்த மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி ஆகியோர் ராணுவ தளவாட கொள்முதலை எளிமைப்படுத்தியதுடன், அதை வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளனர். இருப்பினும் தளவாடக் கொள்முதலானது மிகுந்த கவனத்துடனும், விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து