ரூ. 158 கோடி மதிப்பில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      தமிழகம்
cm today 17-11-2018

சேலம்,சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற விழாவில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 825 பயனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், ரூ.158 கோடி மதிப்பில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.சேலம் மாவட்டம், மேச்சேரியில், ரூ. 158 கோடியில் மேச்சேரி - நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்ட திறப்பு விழா நடைபெற்றது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 67 குடியிருப்புகளும், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 338 குடியிருப்புகளும், மேச்சேரி, பி.என்.பட்டி மற்றும் வீரக்கல்புதூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளிலும் என மொத்தம் 405 குடியிருப்புகளுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இருசக்கர மானியம்...ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கும், தூய்மை பார்வை இயக்கத்தின் சார்பில் 90 பயனாளிகளுக்கு தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவதற்கும் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு ரூபாய் 1,15,80,000 மானியத் தொகையும், மகளிர் திட்டம் சார்பில் 14 மகளிர் சுயஉதவிக் குழுவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு பாதுகாப்பு நிதி உதவியும், ஒரு மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் என 151 பயனாளிகளுக்கு ரூபாய் 3,75,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மானியத் தொகை...வருவாய்த் துறையின் சார்பில் 394 பயனாளிகளுக்கு ரூபாய் 19,79,600 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் நிலவரித் திட்டப் பட்டா உள்ளிட்டோர்களுக்கும், வேளாண்மைத் துறை சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூபாய் 2,46,800 மதிப்பீட்டில் தெளிப்பு நீர் பாசனக் கருவி, மழைத்தூவான் கருவி, விதைகள் மற்றும் வேளாண் கருவிகள், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைப்பதற்கு ரூபாய் 15 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

20 விவசாயிகளுக்கு...தோட்டக்கலைத் துறையின் சார்பில் 20 விவசாயிகளுக்கு ரூ.18,10,200 மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன நிலப் போர்வை, தெளி நீர் பாசனம், பசுமைக் குடில், வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான மானியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், 10 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயநிதித் திட்ட 1 பயனாளிக்கு ரூபாய் 95 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடியே 15 லட்சம்...பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையின் சார்பில் மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் மதிப்பீட்டில் கணிப்பொறி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 50 நபர்களுக்கு ரூபாய் 37,90,000 மதிப்பீட்டில் மாநில கடனுதவி மற்றும் பயிர்க் கடனுதவி, ஆதி திராவிடர் நலத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 25,000 சுயஉதவி தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியம் என மொத்தம் 825 பயனாளிகளுக்கு ரூபாய் 2,15,21,800 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் வழங்கப்பட்டது.

Trisha & Vishaal pair up for new film | Cine Gossips

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து