முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விஜய் மல்லையா, அம்பானியிடம் உள்ள மோசடி பணம் பறிமுதலாகும்: ராகுல் காந்தி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, அனில் அம்பானி, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரிடம் இருக்கும் மோசடி பணம் பறிமுதல் செய்யப்படும்; அந்த பணத்தை கொண்டு, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதியளித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநிலசட்டசபை2ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கோரியா மாவட்டத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் ஏழை விவசாயிகளின் கடனை அவர் தள்ளுபடி செய்யவில்லை. சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் வென்று, மாநிலத்தில் ஆட்சியமைத்ததும், விவசாயிகள் அனைவரின் கடனையும் 10 நாள்களில் காங்கிரஸ் தள்ளுபடி செய்யும். சத்தீஸ்கரில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதற்கான நிதி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, அனில் அம்பானி போன்ற தொழிலதிபர்களிடம் இருந்து வரும். அவர்களிடம் இருக்கும் பணத்தை எடுத்து, விவசாயிகள் கடனை நாங்கள் தள்ளுபடி செய்வோம்.வங்கியில் இருந்து ரூ.10,000 கோடி கடனை வாங்கிவிட்டு, நாட்டை விட்டு விஜய் மல்லையா தப்பியோடி விட்டார். நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் ரூ.35,000 கோடியுடன் தப்பி சென்று விட்டனர். ரபேல் ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி கிடைத்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ஏழைகள், நேர்மையானவர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து, வங்கிகள் வாசலில் வரிசையில் மத்திய அரசால் காத்திருக்க வைக்கப்பட்டனர். கருப்பு பணத்துக்கு எதிராக போராடுவதாக மோடி தெரிவிக்கிறார். தலையணைக்கு கீழும், வீடுகளிலும் பணத்தை பதுக்கி வைத்திருப்போரை திருடர்கள் என்றும், அவர்களுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மோடி அண்மையில் தெரிவித்தார். பொது மக்கள் யாருடைய பணத்தையும் திருடவில்லை. பணத் திருட்டில் ஈடுபட்ட நபர், மோடிதான். நேர்மையான நபர்களை அவர், வங்கி வாசலில் வரிசையில் நிற்க வைத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம், தெளிவானது ஆகும். காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து