முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களிடம் வீட்டுவேலை வாங்கியதாக இந்திய வம்சாவளி - பேராசிரியர் மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் அஷிம் மித்ரா, தன்னிடம் படிக்கும் மாணவர்களை வீட்டு வராண்டாவில் தங்க வைத்து, நாயை குளிப்பாட்டுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளை செய்ய சொல்லி அடிமை போல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிசோரி - கன்சாஸ் பல்கலைக் கழகத்தில் பார்மசி பேராசிரியராக பணியாற்றி வருபவர் அஷிம் மித்ரா. இந்த பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்று வருகின்றனர். இந்திய மாணவர்களை பல்கலைக் கழகத்தில் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளை மித்ரா செய்து வந்துள்ளார்.

இவரது ஏற்பாட்டின் கீழ், இந்திய மாணவர்கள் பலர் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், பல்கலைக் கழகத்தில் தன்னிடம் படித்து வரும் மாணவர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. வார இறுதி நாட்களில் மாணவர்களை அழைத்து, தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, நாயை குளிப்பாட்டி உணவு கொடுத்தல், வீட்டின் சில பகுதிகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்யுமாறு நிர்பந்தித்தாக கூறப்படுகிறது.

மேலும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருதல் போன்ற வேலைகளையும் செய்யுமாறு நிர்பந்தித்துள்ளார். அவ்வாறு பணி செய்ய மறுத்த இந்திய மாணவர்களை பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேற்றி விடுவதாகவும், கல்வி பாதியிலேயே நின்றுவிடும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மித்ராவுக்கு எதிராக மற்றொரு இந்திய பேராசிரியரான முகர்ஜி என்பவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து பேராசிரியர் மித்ராவின் செயல்பாடுகள் தொடர்பாக அமெரிக்க பத்திரிகைளில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை பேராசிரியர் அஷிம் மித்ரா மறுத்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவை பொறுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து