முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை இல்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்

புதன்கிழமை, 21 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பத்திரிகையாளர் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவூதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது என்று டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் தலையீடு

அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கொலை செய்யப்பட்ட கசோக்கி,  கட்டுரைகள் எழுதி வந்தவர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது. கசோக்கி படுகொலை, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுத்தான் நடந்துள்ளது என அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. கூறியதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு கூறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை இல்லை

இந்த நிலையில், கசோக்கி படுகொலையில் அமெரிக்கா எந்த இறுதி முடிவுக்கும் வந்து விடவில்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சவூதி அரேபியாவுக்கு எதிராகவோ அல்லது பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதிராகவோ கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை என்று டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவின் நலனுக்காவும் இஸ்ரேல் மற்றும் பிற நட்பு நாடுகள் நலனுக்காவும் உறுதியான நட்பு நாடாக சவூதி அரேபியாவுடன் இருக்கப்போவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மதிப்பீடு...

மேலும், மன்னர் சல்மானும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் கசோக்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். எனவே, எங்கள் புலனாய்வு அமைப்பு அனைத்து தகவல்களையும் தொடர்ந்து மதிப்பீடு செய்யும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து