முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபார்மில் இருக்கும்போதே என்னையும் அணியில் இருந்து நீக்கினார்கள்: கங்குலி வருத்தம்

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ‘நான் ஃபார்மில் இருக்கும்போதே அணியில் சேர்க்காமல் என்னை உட்கார வைத்தார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

சர்ச்சை வெடித்தது...

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், முக்கியமான அரையிறுதி போட்டியில் மிதாலிராஜ் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இதில், பி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

முதலிடம் பிடித்தது

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை இந்திய அணி வென்றது. இந்தப் போட்டி யில் மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. அதற்கு முன், 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந்தது.

வெளியேறியது...

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி, ஆன்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி, 19.3 ஓவரில் 112 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில், அதிகப் பட்சமாக மந்தனா 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வியை அடுத்து இந்திய மகளிர் அணி, உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.

கடும் விமர்சனம்...

முக்கியமான இந்தப் போட்டியில், இந்த தொடரில் இரண்டு அரை சதம் விளாசிய மிதாலிராஜ் சேர்க்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.  இதையடுத்து மிதாலி ராஜின் மானேஜர் அனிஷா குப்தா, அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விளாசினார். ‘கவுர், சூழ்ச்சியாக செயல் படுகிறார். அவர் பொய் சொல்கிறார். முதிர்ச்சியற்றவர், கேப்டனாக இருக்க தகுதியில்லாதவர்’ என்று ட்விட்டரில் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

எனக்கும் நேர்ந்தது...

இதையடுத்து மகளிர் கிரிக்கெட் அணிக்குள்ளும் அரசியல் புகுந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ;ஃபார்மில் இருக்கும்போதே நானும் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆச்சரியம் இல்லை...

அவர் கூறும்போது, ‘மகளிர் ஒரு நாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது நடப்பதுதான். நானும் கேப்டன் பதவிக்குப் பிறகு உட்கார வைக்கப்பட்டேன். மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதைப் பார்த்ததும் ‘வெல்கம் டு த குரூப்’ என்று சொல்லிக்கொண்டேன். கேப்டன்களை இப்படி உட்காரச் சொல்வது நடக்கிறது. அதைச் செய்து விட்டுப் போவோம். பைசலாபாத்தில் என்னை இப்படி உட்கார வைத்தார்கள். அப்போது ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தாலும் 15 மாதங்களாக நான் ஆடவேயில் லை. வாழ்க்கையில் இப்படியும் நடக்கும். மிகச் சிறந்தவர்களுக்கு சில வேளைகளில் கதவு காட்டப்படும்” என்று கூறிய கங்குலி, மிதாலி ராஜூக்கு முடிவு அல்ல, அவரது பயணம் இதோடு முடிந்துவிடாது’ என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து