முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க கூட தகுதி இல்லாதவர் ஸ்டாலின்வி .வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க கூட தகுதி இல்லாதவர் மு.க. ஸ்டாலின் என்று மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மதுரை வடக்குத் தொகுதியில் உள்ள ஏ.சி.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் நோவாராஜா தலைமை வகித்தார்.  மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஜெயவேல், மாவட்ட இளைஞர்அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், வட்ட செயலாளர்கள் ராமன், ஜெயராஜ், காஜா, வி.எம்.ஜெயராஜ், மகாதேவன், வீரணன், செல்லூர் பாலமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா கூறியதாவது,
அம்மாவின் உன்னத திட்டமான மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் திட்டம், கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூட இந்த ஆண்டிற்கு 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் முதல்வரின் ஆணைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி திட்டத்தின் கீழ் இது வரை 36லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்குவதன் மூலம் தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 48 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி சேர்க்கையில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது என்ற பெருமையை நாம் பெற்றுள்ளோம்.
கடந்த தி.மு.க.ஆட்சியில் 2008-ம் ஆண்டு நிஷா புயல் ஏற்பட்டது, அதன் வேகம் 83.கி.மீ தான், ஆனால் அதில் உயிரிழப்பு 183 நபர்கள். இறந்தவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட தொகை ரூ. 2 லட்சம் தான். தற்போது கஜா புயலின் வேகம் 111கி.மீ வேகம் இந்த புயல் சுனாமியைக் காட்டிலும் மிக மோசமானதாகும், ஆனால் அரச திறமையாக கையாண்டதால் உயிர் சேதங்கள் அதிகளவு ஏற்படவில்லை ஆனாலும் கூட இதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியினை முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி அரசு எடுத்த நடவடிக்கையை பலரும் பாராட்டி உள்ளனர். மக்கள் மத்தியில் அரசிற்கு நல்ல பெயர் வருகிறது என்று நினைத்து அரசை பார்த்து எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின் குறை கூறிவருகிறார். இவர் தி.மு.க.ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது போன்ற நிவாரண உதவியை செய்தது உண்டா?
தற்போது புயல் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று தமிழக மக்களே பராட்டி வருகின்றனர். எப்போது இடைத்தேர்தல் அறிவித்தாலும் அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க.  மாபெரும் வெற்றி பெறும், தி.மு.க.வில் தற்போது கூட்டணிகட்சிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி இருக்கும் போதே தி.மு.க.பலவீனமாக இருந்தது. தற்போது மேலும் பலவீனமடைந்து வருகிறது, ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க கூட தகுதி இல்லாதவராக இருக்கிறார். ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து