எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து வெளியிட்டுள்ளார் - சந்திரசேகரராவ் மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
Chandrababu Naidu - Chandrasekhar Rao 2018 12 04

ஐதராபாத் : தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்த மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அதில் ஒவ்வொன்றிலும் ரூ.16-ஐ இணைத்து சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ரஹ்மத்நகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

இந்து, முஸ்லிம்களுக்கு இடையே பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். தெலுங்கானாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்கும் விதமாகவே சந்திரசேகர ராவ் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார். இது பா.ஜ.க.வுக்கு பலன் தரும் விதமான செயலாகும்.

தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்த மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அதில் ஒவ்வொன்றிலும் ரூ.16-ஐ இணைத்து சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். தோல்வி பயம் காரணமாகவே சந்திரசேகர ராவ் மொத்தம் 3 தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற லஞ்சம், ஊழல், மிரட்டல் என அனைத்து வழிகளையும் அவர் கடைபிடித்து வருகிறார். ஆனால் மக்கள் யாரும் அந்த மாயையில் விழாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து