தொகுப்பாளர் கேள்வியால் எழுந்த சர்ச்சை

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      விளையாட்டு
Martin Solveig 2018 12 05

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஓர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த வீராங்கனைக்கான பலோன் டி ஓர் விருதுக்கு நார்வே வீராங்கனை அடா ஹிஜெர்பர்க்கு வழங்கப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது முதன்முறையாக பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி நார்வேயைச் சேர்ந்த 23 வயதான கால்பந்து வீராங்கனை அடா ஹஜிர்பெர்க்குக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. விருதினை பெறுவதற்காக அடா, மேடைக்கு வந்திருந்தார்.

அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மார்டின் சொல்வேஜ், "உங்களுக்கு செக்ஸியாக நடனமாடத் தெரியுமா?" என கேள்வியெழுப்பியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அடா, உடனடியாக "இல்லை" என பதிலளித்து முகம் சுளித்தபடியே அங்கிருந்து கிளம்ப முற்பட்டுள்ளார். ஆனால் மற்றொரு தொகுப்பாளர் அதனை சரி செய்து, இயல்பாக மாற்றியிருக்கிறார். இந்த விவகாரமானது இணையத்தளம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து