அம்பேத்கர் நினைவு தினம்: பார்லி. வளாகத்தில் உள்ள சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      இந்தியா
pm modi flowral tribute ambedkar statue 2018 12 06

புதுடெல்லி : டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

மலர்களால் அலங்கரிப்பு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜனாதிபதி மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து