எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புவனேஷ்வர் : உலகக் கோப்பை ஹாக்கியில் கனடாவை இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிவு சியில் பெல்ஜியத்தை கோல் வித்தியாச அடிப்படையில் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
முந்தைய போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக திரில் டிரா செய்த இந்திய அணி இதுவரை தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியமும் இந்தியா போலவே 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தினால் இந்திய அணி பிரிவு சி-யில் முதலிடம் பெற்றது. இதனையடுத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
நேற்று 1-3-4-3 என்ற களவியூகத்தில் தொடங்கிய இந்திய அணி படு ஆக்ரோஷமாக ஆடி கடைசி கால்மணி நேர ஆட்டத்தில் 4 கோல்களை அடித்து கனடாவை நொறுக்கியது. தொடக்க கணம் முதலே பந்து இந்திய ஸ்டிக்குகளில்தான் அதிகம் புழங்கியது. கனடா தடுப்பாட்ட வீரர்களும் நடுக்கள வீரர்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். முதல் அடியை சிங்லெனா சிங் வலது புறத்திலிருந்து கோலை நோக்கி அடிக்க கனடா அணி கோல் கீப்பர் ஆண்டனி கிண்ட்லர் தடுத்து விட்டார். பிறகு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் கோலாகவில்லை.
ஆனால் தன் பிறகு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை ரெபரல் மூலம் இந்தியா பெற ஹர்மன்ப்ரீத் சிங் பிரமாதமான ஒரு டிராக் பிளிக்கை அரக்கத்தனமாக அடிக்க முதல் கோல் விழுந்தது. ஆனால் பிறகு பரபரப்பான இரு அணிகளின் ஆட்டத்தில் 39-வது நிமிடத்தில் கனடா வீரர் புளோரிஸ் வான் சன் மிகப்பிரமாதமாக இந்திய கோல் கீப்பர் தலைக்கு மேல் ஒரு ஸ்கூப் ஷாட் அடித்து கோலுக்குள் திணிக்க கனடா 1-1 என்று சமன் செய்தது.
46-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்ளென்சனா ஒரு பிரமாதமான கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். இந்தியா 2-1. உடனேயே 47-வது நிமிடத்தில் கனடா தடுப்பாட்ட வீரர் ஒருவர் பந்தைக் கோட்டை விட லலித்குமார் உடனடியாகப் பாய்ந்து பந்தைக் கோலுக்குள் திணிக்க இந்தியா 3-1. ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அமித் ரோஹிதாஸ் அதிரடி கோலை அடிக்க இந்திய அணி 4-1 என்று முன்னிலை வகித்தது. 57-வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து சுமித் பந்தை விறுவிறுவென எடுத்து வந்து ஓடிய படியே பாஸ் செய்ய லலித் குமார் தன் 2-வது கோலை அடிக்க இந்திய அணி 5-1 என்று முடித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 1 min ago |
ஆப்பிள் பான் கேக்5 days 1 hour ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 3 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
-
சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன
18 Mar 2024சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் கருத்து
18 Mar 2024மும்பை : ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மும்பை அணயின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 19-03-2024.
19 Mar 2024 -
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப். 6-ம் தேதி வரை நீட்டிப்பு
19 Mar 2024புது டெல்லி, மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி இங்கிலாந்து தூதரகம் அறிக்கை
19 Mar 2024லண்டன், மன்னர் சார்லஸ் இறந்ததா வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
19 Mar 2024மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.