முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்கக் கோரி குஜ்ஜார் இனத்தவர் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்கக் கோரி குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பெயருக்கு கமல் நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் ராஜஸ்தானில் முதல்வர் தேர்வில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரோலியில் குஜ்ஜார் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பதவி தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள். அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது டுவீட்டர் பக்கத்தில் சச்சின் பைலட் கூறியிருந்தார்.

ஆனால் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டங்கள் நடந்தன. ஆல்வார் பகுதியில் குஜ்ஜார் சமூக மக்கள் நேற்று சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர். இந்த போராட்டத்தால் காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து