முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெர்த் : இந்தியாவுக்கு எதிரான பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது.

பேட்டிங் தேர்வு

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.  2-வது டெஸ்ட் பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது டெஸ்டை கைப்பற்றும் உத்வேகத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும், முதல் டெஸ்ட்டை வென்ற உற்சாகத்தில் இந்திய வீரர்களும் களமிறங்குகின்றனர்.

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

இந்திய அணி

1. லோகேஷ் ராகுல், 2. முரளி விஜய், 3. சத்தீஸ்வர் புஜாரா, 4. விராட் கோலி, 5. அஜின்க்யா ரஹானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. இஷாந்த் சர்மா, 9. முகமது ஷமி, 10. உமேஷ் யாதவ், 11. ஜேஸ்பிரிட் பும்ரா

ஆஸ்திரேலிய அணி

1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.

நிலையான ஆட்டம்

போட்டி நடக்கும் ஆப்டஸ் மைதானம் புதிதாகக் கட்டப்பட்டது. இங்கு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியாவின் 10-வது டெஸ்ட் மைதானமான இதன் பிட்ச், வேகமானதாகவும் பந்து பவுன்ஸ் ஆகும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும் ஹாரிஸும் களமிறங்கினர். இருவரும் அடித்து ஆடினார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பின்ச் அரைச்சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 112 ஆக இருந்தபோது பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அவர் வெளியேறினார். அடுத்து உஸ்மான் கவாஜா வந்தார்.

ஹாரிஸ் அரைசதம்

அவர் 5 ரன் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷான் மார்ஷும் ஹாரிஸும் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர். ஹாரிஸ் அபாரமாக ஆடி அரைசதத்தை தாண்டினார். அவர் 70 ரன் எடுத்திருந்த நிலையில் விஹாரி வீசிய பந்தில் துணை கேப்டன் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் விஹாகி, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து