காற்‌றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுகிறது: மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      தமிழகம்
chennai meterological 2018 10 24

சென்னை : வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்‌றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும், நாளை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ்வு மண்டலமாக...

கஜா புயலுக்குப் பின் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. வட மாவட்டங்களை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்‌பெற்றது. இதனைதொடர்ந்து இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக வலுப்பெறும்...

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்‌றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் ஓங்கோ, காக்கிநாடா இடையே கரையைக் ‌கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணாமாக இன்று சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது. நாளை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக்காற்று அவ்வப்போது அதிகமாக வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து