முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

காந்திநகர் : விவசாயிகள் தற்கொலைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று ஹிந்துத்துவத் தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

குஜராத் மாநிலம், தெகம் நகரிலிருந்து இருந்து காந்திநகர் வரை   பேரணி நடத்த ராஷ்ட்ரீய கிசான் பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இது, தொகாடியாவின் சர்வதேச ஹிந்து பரிஷத் அமைப்பின் ஒரு பிரிவாகும்.

இந்தப் பேரணியில், திரளான விவசாயிகளும், உள்ளூர்வாசிகளும் பங்கேற்றனர்.

பேரணி நிறைவு பெற்ற காந்தி நகரில் பிரவீண் தொகாடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளை வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்திக் கொள்வதை பா.ஜ.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. கடன் பிரச்னையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கைகளின் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியவில்லை என்றால் ஆட்சியைவிட்டு இந்த அரசு விலகிக் கொள்ள வேண்டும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், விவசாயிகளுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் தொகாடியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து