முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமால் கொலை விவகாரம்: அமெரிக்க தீர்மானத்தை விமர்சித்த சவுதி அரேபியா

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

சவுதி, ஜமால் கொலை விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட கண்டன தீர்மானத்தை சவுதி அரேபியா விமர்சித்துள்ளது.

அமெரிக்க செனட் சபையில் துருக்கி சவுதி தூதரக அலுவலகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமாலின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் இந்த நிகழ்வில் ஜமாலின் கொலைக்குக் காரணமான சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராகவும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் கண்டனத் தீர்மானத்தை சவுதி விமர்சித்துள்ளது.

இது குறித்து சவுதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜமால் கொலை வழக்கில் சவுதிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சவுதி முன்னரே கூறி இருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் விவாதங்களில் ஜமாலின் கொலை இழுக்கப்படவில்லை என்று கருதுகிறோம். இதன் காரணமாக அமெரிக்கா - சவுதி இடையே பாதிப்பு ஏதும் இருக்காது என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.a

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து