மானாமதுரையில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2018      சிவகங்கை
27 mannamadu news

மானாமதுரை,- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று மானாமதுரையில்  18வார்டில் உள்ள அஇஅதிமுக.,வை சேர்ந்த நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில்  கதர் மற்றும் கிராம தொழில் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், மானாமதுரை அஇஅதிமுக நகர செயலாளர் விஜி போஸ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அஇஅதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்;
தமிழகத்தில் இடைத் தேர்தல் எப்போது நடைப்பெற்றாலும் அஇஅதிமுக அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து