முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியா பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா - ஸ்ரீகாந்த்

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், 7-ம் நிலையில் இருப்பவரும் ஆன சாய்னா நேவால் ஹாங் காங்கை சேர்ந்த புய் யின் யிப்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-14, 14-21, 21-16 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் 2-ம் நிலை வீராங்கனையும், 2017-ல் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங்கின் வாங் விங் கி வின்செட்-ஐ எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 23-21, 8-21, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

வார்னர் விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி

வங்காளதேச பிரிமீயர் லீக் டி-20 தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் சியால்ஹெட் சிக்சர்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. சியால்ஹெட் சிக்சர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 19-வது ஓவரை கிறிஸ் கெய்ல் வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த வார்னர், அடுத்த இரண்டு பந்திலும் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. இதனால் வலது கை பேட்ஸ்மேனாக மாறினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய வார்னர், அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், சிறந்த வலது கை பேட்ஸ்மேன் போன்று பேட்டிங் செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.

ஆனால், வார்னர் பேட்டிங் செய்தது ஐசிசி-யின் விதிமுறைக்கு உட்பட்டதுதானா? என்ற கேள்வியை எழுப்பியது. அதனால் கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் வார்னரின் பேட்டிங் பதிவை ஆய்வு செய்தது. அப்போது அவர் விதிமுறைப்படிதான் பேட்டிங் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஸ்டூவர்ட் பிராட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்கள் நடக்க இருக்கின்றன. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் 23-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 317 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 203 ரன்னில் சுருண்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 56-வது ஓவரின் 5-வது பந்தில் ஜோசப்பையும், கடைசி பந்தில் கம்மின்சையும், 57-வது ஓவரின் முதல் பந்தில் சார்லஸையும் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து