முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்றும், மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்க அனுமதி இல்லை என்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

போராட்ட அறிவிப்பு...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. 

கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

பொதுநல வழக்கு

இவர்களது போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இந்தநிலையில் கோர்ட்டில் கொடுத்த உத்தரவாதத்தை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் திரும்ப பெற்றதோடு மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் இன்று முதல் (22-ம் தேதி) ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சில சங்கங்கள்...

திருச்சியில் நடந்த உயர்மட்ட குழுவில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதன்படி இன்று 22-ம் தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 மற்றும் 24-ம் தேதி மறியல் போராட்டமும், 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து சென்னையில் கூடி முடிவு செய்து அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த போராட்டத்தில் ஒரு பிரிவினர் கலந்து கொள்ளவில்லை. என்.ஜி.ஒ. சங்கம், தலைமை செயலக சங்கம், ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் பங்கேற்கவில்லை.

கல்வித்துறை உத்தரவு...

இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வேலை நிறுத்த நாட்களில் மாவட்ட வாரியாக பணிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வருகை பதிவு விவரம்...

இந்நிலையில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (இன்று முதல்) வேலைக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம், விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு விடுப்பு கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 22-ம் தேதி காலை 10.30 மணிக்குள் ஊழியர்களின் வருகை பதிவு குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை தினமும் வருகை பதிவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தலைமை செயலாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து