முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் 'பெண் குழந்தைகளைக் காப்போம்' திட்டம்: விளம்பரத்துக்கு மட்டுமே 56 சதவீத நிதியைச் செலவிட்ட மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் என்று அழைக்கப்படும் ''பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்'' திட்டத்தின் விளம்பரத்துக்கு மட்டும் மொத்த நிதியில் இருந்து 56 சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் அரியாணா மாநிலத்தில் இத்திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அப்போது முதல் இந்த திட்டத்துக்கான பிரசாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலினம் பார்த்துக் கருச்சிதைவு செய்வதைத் தடுத்தல், பெண் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளையும் பாதுகாப்புகளையும் உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். ஆனால் மத்திய அரசு இதுதொடர்பான களப்பணிக்கு பதிலாக விளம்பரங்களுக்கு அதிகத்தொகையை செலவழித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் இத்தகவல்களைத் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் படி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்'' திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், 56.27 % (ரூ.364.66 கோடி) விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. 24.5 சதவீத (ரூ.159.18 கோடி) தொகை மட்டுமே மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளன. 2018-19-க்கான ஆண்டில் மத்திய அரசு இத்திட்டத்துக்காக ரூ.280 கோடியை ஒதுக்கியது. இதில் விளம்பரப் பணிகளுக்காக ரூ.155.71 கோடி ஒதுக்கப்பட்டது. 70.63 கோடி ரூபாய் மட்டும் மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.53.66 கோடி நிதி இன்னும் ஒதுக்கீடே செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.200 கோடி நிதியில் 68% விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது. மொத்தத்தில் 2014-15ம் ஆண்டில் ரூ.18.91 கோடிகளும் 2015-16ம் ஆண்டில் ரூ.24.54 கோடிகளும் 2016-17ம் ஆண்டில் ரூ.29.79 கோடிகளும் 2017-18ம் ஆண்டில் ரூ.135.71 கோடிகளும் விளம்பரத்துக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து