பிரதமர் வேட்பாளராக ராகுல் கர்நாடக முதல்வர் திடீர் பல்டி

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      அரசியல்
H D Kumaraswamy 2018 7 23

பெங்களூர், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த விரும்புவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுக்கு எதிராக நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜி தகுதியானவர் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால், தங்களுடைய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிக்கும் என தற்போது குமாரசாமி கூறியுள்ளார்.

பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இடம் பெற்றுள்ள மம்தா, மாயாவதி போன்றோர் திறமைமிக்கவர்கள் என்றும், எனினும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியையே முன்னிறுத்த தங்கள் கட்சி விரும்புவதாக குமாரசாமி கூறி உள்ளார். மேலும் பிரதமர் மோடி, ஒரு காகிதப் புலி மட்டுமே. ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சி பெற்று உள்ளார். மோடி நன்றாக பேசுகிறார். அவரது விளக்க காட்சிகள் நன்றாக உள்ளது. அவர் சமூக ஊடகத்தை பயன்படுத்துகிறார், ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது சாதனை என்ன? என்றும் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து