முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு ராமநாதபுரத்தில் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும ; கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் தேர்வு  மையங்களை கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஆன்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும்; அமைக்கப்பட்டுள்ள தேர்வு அறைகளில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். அப்போதுஅவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக மாவட்டத்தில் ராமநாதபுரம்பகுதிகளில் 12 இடங்களில் 150 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடவடிக்கைகளை கண்காணித்திட ஏதுவாக 12 ஆய்வு அலுவலர்களும், 12 வீடியோ கிராபர்களும்,  காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இத்தேர்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்த 2,972 நபர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.  அதில் 2,009 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். வினா மற்றும் விடைத்தாள்களை சம்மந்தப்பட்ட தேர்வு அறைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்புடன் 4 நகர்வு குழுக்களும், தேர்வின் போது முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுத்திடும் வகையில் 1 பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
     தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தேர்வறைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதும் நபர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட  அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை மீண்டும் அந்தந்த தேர்வு மையங்களில் உள்ளவாறு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்திற்கு  பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார். அப்போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர் சுமன் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து