முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் பணி நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 450 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

காலக்கெடு...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால் அரசு பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது. அதேநேரத்தில், காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆசிரியர்கள் வழக்கம்போல் நேற்று பணிக்கு திரும்பிவிட்டனர். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்த அரசு பள்ளியும் நேற்று மூடப்படவில்லை.

பள்ளிக்கல்வித்துறை...

இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஆசியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 450 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு உள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணியாற்றிய இடத்தில் உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு கல்லி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

இன்று முதல் நியமனம்

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள அறிக்கையில், தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மொத்தம் 1.71 லட்சம் பேர் நியமிக்கப்படுகிறார்கள். என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ள நிலையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து