முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலை நடத்த தயார்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் நேற்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

விண்ணப்பிக்கலாம்...

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.1.2019 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.

தயார் நிலையில்...

தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுடன் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது. பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்துள்ளன. அதேபோல் தான் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக எங்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.

ஆலோசனை...

பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசனை நடத்தப்படும். தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஓசூர் தொகுதி காலி இடம் பற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து