ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் இலங்கை தோல்வி: கேப்டன் பதவியில் இருந்து சண்டிமால் அதிரடி நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      விளையாட்டு
Dinesh Chandimal 2019 02 05

கொழும்பு : ஆஸ்திரேலியாவில் நான்கு இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே அடித்ததால் இலங்கை கேப்டன் சண்டிமல் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

படுதோல்வி...

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னிலும், 2-வது டெஸ்டில் 366 ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. அந்த அணியின் கேப்டன் சண்டிமல் படுமோசமாக விளையாடினார். முதல் டெஸ்டில் 5 மற்றும் 0 ரன்கள் அடித்த அவர், 2-வது டெஸ்டில் 15 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரி 6 மட்டுமே.

கருணாரத்னே...

இதனால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இலங்கை அணியில் இருந்து சண்டிமல கழற்றி விடப்பட்டார். அத்துடன் உள்ளூர் தொடரில் விளையாட வலியுறுத்தப்பட்டுள்ளார். சண்டிமல் அணியில் இல்லாததால் கருணாரத்னே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 13-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து