விசா அதிகாரியின் கன்னத்தில் அறைந்த பெண்மணிக்கு சிறை

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      உலகம்
woman slapped visa officer 2019 02 07

ஜகார்தா : இந்தோனேசிய விசா அதிகாரியின் கன்னத்தில் அறைந்த லண்டன் பெண்மணிக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அவுஜ்-இ-தகதாஸ் என்னும் பிரிட்டிஷ் பெண்மணி சுற்றுலா விசாவில் இந்தோனேசியா வந்துள்ளார். 43 வயதான அவர் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார். தன்னுடைய விசாவுக்கான கெடு முடிந்தும் லண்டன் அவர் திரும்பிச் செல்லாததாகக் கூறப்படுகிறது.விசா காலாவதியான பிறகும் அதிக நாட்கள் தங்கியிருந்ததால் 4 ஆயிரம் டாலர்கள் அபராதத்தைச் செலுத்தும்படி விசா வழங்கும் அதிகாரி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதம் முற்றிய நிலையில், விசா அதிகாரியின் கன்னத்தில் பளாரென அறைந்தார் அவுஜ்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.இதனிடையே இதுகுறித்து விசாரித்த இந்தோனேசிய நீதிமன்றம், அரசு அதிகாரிக்கு எதிராக வன்முறையாக நடந்துகொண்டதால், அவுஜுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளிப்பதாகத் தெரிவித்தது.ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்த அவுஜ், காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டு அதிகாரிகள் அவரின் கைகளில் விலங்கிட்டு, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து