அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து வாலிபர் சாவு

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      உலகம்
e-cigarette 2019 02 08

வாஷிங்டன், அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து வாலிபர் பலியானார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரவுன். இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிகரெட் கடைக்கு சென்றார். அங்கு எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கிய அவர் கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2 மரணம் இதுவாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து