பத்திரிகையாளர் ஜமால் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: ஐ.நா. அறிக்கை

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      உலகம்
united-nations 2019 01 10

நியூயார்க், பத்திரிகையாளர் ஜமால் கொலை சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.குழு நடத்திய விசாரணையில் வெளியிட்ட முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

 அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர் ஜமால்.  இந்த நிலையில் அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து