முதல்வருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு : மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      தமிழகம்
rajini meet cm 2019 02 10

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் அழைப்பு விடுத்து வருகிறார்.  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ஹாசன், இளையராஜா, சிவாஜி குடும்பம் என பல பிரமுகர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த ரஜினிகாந்த் நேற்று சென்னை கீரின்வேஸ் ரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

ரஜினியை வரவேற்ற முதல்வர், அவரை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார். இன்று நடைபெறவிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மகளின் திருமணத்தில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர், நடிகையர், திரையுலக கலைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து