டுவிட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      இந்தியா
priyanka-gandhi 2019 02 06

புது டெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பொறுப்பு பிரியங்காவுக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நியமனம் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

இதனிடையே தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். அன்றாட நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி வதேரா என்ற பெயரில் @priyankagandhi என்ற முகவரியில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அவர் கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து