முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

யாங்கோன் : மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கோ னி கொலை வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஆங் வின் சா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 4 பேர் மீதான வழக்கு யாங்கோன் வடக்கு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மீதமுள்ள 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து