முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. அமைத்தது வெற்றிக்கூட்டணி - ஒப்பந்ததிற்கு பின் ராமதாஸ் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க.வுடன் பா.ம.க அமைத்துள்ள வெற்றிக்கூட்டணி, தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை அடையார் கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் இறுதியில் பா.ம.க எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வெற்றிக் கூட்டணி...

அ.தி.மு.க.வும், பா.ம.கவும் தற்போது வெற்றிக்கூட்டணி அமைத்துள்ளோம். எந்தெந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும். இந்த கூட்டணி மக்கள் நலக்கூட்டணி, மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி. இது ஒரு வெற்றிக் கூட்டணியாக, மெகா கூட்டணியாக வளரும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுகிறது. இதற்கு உதாரணம் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. 37 தொகுதியில் வெற்றி பெற்றது உங்களுக்குநினைவிருக்கும். பா.ம.க - அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததற்கான காரணத்தை அன்புமணி பின்னர் உங்களிடம் விளக்குவார்.

10 கோரிக்கைகள்...

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு நாங்கள் சில கோரிக்கையை மக்கள்நலனுக்காக வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் உரிமையை மீட்டு எடுப்பதற்காக 10 கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். இதனை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தந்திருக்கிறோம். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் மற்றும் 20 நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். .தமிழ்நாட்டில் சாதிவாரியாக ம்ககள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். எல்லா தீர்மானம் முக்கியமானதாக இருந்தாலும் 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான தீர்மானம். இதற்கான முன்முயற்சிகளை அ.தி.மு.க. எடுத்திருக்கிறது.

500 மதுக்கடைகள்...

அ.தி.மு.க தனது அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளார்கள். தமிழ்நாட்டில் படிபடியாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். 500 மதுகடைகளை மூட வேண்டும். தமிழ்நாட்டில் படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்படவேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடத்தின் பணியை முறியடிக்க வேண்டும்.இதற்காக அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடியது உங்களுக்கு நினைவிருக்கும்.

2 கட்சிகளும் ஆதரவு...

பொதுத்துறை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற 10 கோரிக்கைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அந்த வகையில் பொதுவாக மக்கள் நலன் சார்ந்த தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றுயெடுக்கக் கூடிய கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளுக்கு இரண்டு கட்சிகளும் ஆதரவு கொடுக்கிறது. அந்த அடிப்படையில்தான் இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம்.  இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து