முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இருந்து ராகுல் திருமலைக்கு நடைபயணம்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு ராகுல் நடை பயணம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை விமானம் மூலம் ரேணிகுண்டா வருகை தந்தார். அங்கிருந்து திருப்பதி சென்ற ராகுல் காந்தி, வெங்கடேசுவரர் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக திருமலைக்கு நடந்தே சென்றார். 4 மணி நேரம் நடந்து சென்று ராகுல்காந்தி ஏழுமலையானை வழிபாடு செய்தார். 

ராகுலுடன் ரைஹன் வதேரா (பிரியங்கா காந்தியின் மகன்) உடன் சென்றார். இருவரும் நடை பயணமாகவே கோயிலுக்கு சென்று வழிபட்டனர். ராகுல் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தாரக ராமா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். கூட்டம் முடிந்தவுடன் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு திருப்பதி கோவிலுக்கு அவர் செல்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து