முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. -பா.ஜ.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

புதன்கிழமை, 6 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : 40 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ச்சி பணிகள் தொடரும்

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும்.  கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் வளர்ச்சி பணிகள் தொடரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து