சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தும் மாயாவதி

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      இந்தியா
Mayawati 2019 02 06

புது டெல்லி, உ.பி.யில் தலித் தலைவர்களில் ஒருவர் என கருதப்படும் பீம் ஆர்மி என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் என்பவருக்கு பிரியங்கா ஆதரவாக இருப்பது பகுஜன் கட்சி தலைவர் மாயாவதிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரும் தேர்தலில் சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

உ.பி.யில் ஆசாத்தை சந்தித்த பிரியங்கா வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடுமாறு கேட்டுள்ளார். தலித் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்து கொண்டு இருக்கும் மாயாவதிக்கு, ஆசாத்தின் வளர்ச்சி கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசாத் வளர்ந்து விட்டால் தலித் ஓட்டுகளை பிரித்து விடுவார் என மாயா அஞ்சுகிறார்.

பகுஜன் கட்சியில் சீட் கிடைக்காதவர்களின் பட்டியலை காங்கிரஸ் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களை பகுஜன் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட வைத்து ஆதரவு கொடுக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. ரேபரேலியில் சோனியாவை எதிர்த்தும், அமேதியில் ராகுலை எதிர்த்தும் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என மாயாவதி அறிவித்திருந்தார். ஆசாத்தை காங்கிரஸ் வளர்த்து வருவதால் ரேபரேலியிலும் அமேதியிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறாராம் மாயாவதி.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து