முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதன்முறையாக ஜனநாயக கடமையாற்றும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மேற்குவங்கம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பெற்று உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்று உள்ளது. அந்த மாநிலத்தில் 20.10 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கின்றனர்.

அடுத்ததாக உத்தரபிரதேசம் (16.70 லட்சம்), மத்திய பிரதேசம் (13.60 லட்சம்) மாநிலங்கள் அதிக இளம் வாக்காளர்களை கொண்டிருக்கின்றன. இதைப் போல ராஜஸ்தான் (12.80 லட்சம்), மராட்டியம் (11.90 லட்சம்), தமிழ்நாடு (8.90 லட்சம்), ஆந்திரா (5.30 லட்சம்) ஆகிய மாநிலங்களும் கணிசமான முதல் முறை வாக்காளர்களை பெற்றிருக்கின்றன. டெல்லியில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 97,684 என தேர்தல் கமிஷனின் பட்டியல் கூறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து