முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 வயதுக்குட்பட்ட 2020-ம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துகிறது

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

மியாமி : சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமை இந்தியா பெற்றுள்ளது.

17 வயதுக்குட்பட்ட...

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் அடுத்த ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இது தொடர்பாக நேற்று மியாமியில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

பிபா அறிவிப்பு...

‘இந்திய கால்பந்து சங்கம், 2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை நடத்த உள்ளது’ என பிபா தனது ட்விட்டரில் தகவல் வெளியிட்டது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் இதனை உறுதி செய்தார். 2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேம்படுத்த...

இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கழகத்தின் செயலாளர் கிருஷ்ணதாஸ் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும் போது, இந்தியாவில் பெண்கள் மத்தியில் கால்பந்து போட்டிகளை மேம்படுத்த ‌இந்த வாய்ப்பு உபயோகமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில்...

தற்போது இந்தியாவின் தேசிய பெண்கள் அணி நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறது. அங்கு புதன்கிழமை நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை 6-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து