மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      தமிழகம்
madras-high-court 2017 7 17

மதுரை, மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ கடந்த மார்ச் 31-ஆம் தேதி மதுரையில் அ.தி.மு.க தரப்பில் செளராஷ்டிரா கிளப்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு செளராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் தனியார் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒவ்வொருக்கும் ரூ.500 மற்றும் பிரியாணி, இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதுமட்டுமின்றி தி.மு.க.வினரும் இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்குகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

எனவே மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து