முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19-வது ஓவரை நெகிக்கு கொடுத்தது சரியான முடிவே - கேப்டன் கோலி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் 19-வது ஓவரை நெகிக்கு கொடுத்தது சரியான முடிவு தான் என பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று  முன்தினம் மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. டிவில்லியர்ஸ் 75 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய மும்பை 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து வென்றது. மும்பை அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. பவன் நெகி வீசிய 19-வது ஓவரில் ஹர்த்திக் பாண்டியா 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 22 ரன் எடுத்து வெற்றிபெற வைத்தார்.

நெகியை தேர்வு...

தோல்வி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- கடைசி கட்டத்தில் மும்பை அணியில் இரண்டு வலது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தனர். பனிப் பொழிவு காரணமாக வேகப் பந்து வீச்சை பயன்படுத்துவது என்பது அபாய தேர்வாக இருந்தது. அதனால் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பவன் நெகியை தேர்வு செய்தோம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக சிறப்பானதாக அமையவில்லை. நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் பந்துவீச்சில் முதல் 6 ஓவரில் 65 ரன் விட்டுக் கொடுத்துவிட்டோம். அதில் இருந்து மீண்டு வருவது எப்போதுமே கடினமானது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து