தீ விபத்தால் சேதமடைந்த பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிகிறது

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      உலகம்
Paris-church-Fire 2019 04 16

பாரீஸ், பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே - டேம் என்ற இடத்தில் உலக புகழ் பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவாலயத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதில் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. அத்துடன் தேவாலயத்தின் 2 கோபுரங்களில் ஒன்று முற்றிலுமாக எரிந்து போனது. இந்த தீ விபத்து குறித்து அறிந்ததும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று முன்தினம் தேவாலயத்தில் எரிந்த தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் தேவலாயத்தை புனரமைப்பதற்காக நிதி குவியத் தொடங்கி உள்ளது. பிரான்சை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் மட்டும் 300 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரத்து 360 கோடி) வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து