திருப்பதியில் இலங்கை அதிபர் சிறிசேனா தரிசனம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      இந்தியா
sirisena tirupathi darshan 2019 04 17

திருமலை : திருப்பதியில் இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருப்பதி உதவி கலெக்டர் மகேஷ்குமார் மற்றும் எஸ்.பி. அன்புராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பிற்பகல் 2 மணிக்கு திருமலைக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் ஸ்ரீவாரி பாதத்தை சாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கு குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து