முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்-திரிணாமுல் காங். கடும் மோதல்: வாக்காளர் பலியான பரிதாபம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார்.   பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. 

இந்நிலையில், வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் (வயது 55) என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

ராணி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது. 

மோதிகஞ்ச் பகுதியில் பா.ஜ.க-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சியின் முகாம் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன.

பாலர்காட் தொகுதிக்குட்பட்ட தெற்கு தினஜ்பூரின் புனியாத்பூரில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் பிணமாக தொங்கினார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து