முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிளகாய் ஏற்றுமதி: இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      உலகம்
Image Unavailable

புது டெல்லி, இந்தியாவில் இருந்து அண்டை நாடான சீனாவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சீன பொது நிர்வாகத் துறை அமைச்சர் லீ குவோவை, இந்திய வர்த்தகத் துறை செயலர் அனுப் வதவான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வர்த்தகம் மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக, இந்திய மிளகாயை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

சீன சந்தையில் இந்தியப் பொருள்களை விற்பதற்கு மத்திய அரசு முயற்சித்து வந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து