முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப்போட்டியில் தோல்வி எதிரொலி: அணியை மாற்றியமைப்பது அவசியம்: சி.எஸ்.கே. பயிற்சியாளர் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : வயதான வீரர்களை கொண்ட அணி என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை மாற்றியமைப்பது அவசியம் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.

8 அணிகள்...

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 12 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 10 வருடங்கள் முடிந்து கடந்த வருடம் 11-வது சீசனின்போது வீரர்கள் அனைவரும் பொது ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். நான்கு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரையும் 8 அணிகள் ஏலம் மூலமே எடுத்தது.

1 ரன்னில் தோல்வி...

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் அனுபவ வீரர்களை தேர்வு செய்தது. இதனால் ‘Daddy Army’ என்றும் ‘Ageing Squad’ என்றும் அழைத்தனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை சந்தித்தது. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தழுவவிட்டது.

புரிந்துகொள்ள...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரியே 34 ரன்கள்தான். இதனால் அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி தோல்வி குறித்த காயம் குறைய சற்று நேரம் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளோம். 2-வது முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளோம். இரண்டு வருடங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. சிஎஸ்கே ஒரு ‘Ageing Team’ என்பதை நாஙகள் புரிந்துகொள்ள வேண்டும்.

திட்டமிடப்படும்...

மீண்டும் சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். டோனியும் இதே எண்ணத்தில் உள்ளார். டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாட செல்கிறார். உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் அடுத்த சீசன் குறித்து திட்டமிடப்படும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து