வான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு: பாகிஸ்தான் அரசு

வியாழக்கிழமை, 16 மே 2019      உலகம்
Imran Khan 2019 04 10

இஸ்லாமாபாத், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கான தடையை இம்ரான்கான் அரசு இம்மாத இறுதிவரை நீடித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை விமானங்கள் கடந்த பிப்ரவரி 26 -ம் தேதி பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுவீசி தாக்கி அழித்தன. இதையடுத்து இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாடு தடைவிதித்துள்ளது. இதற்கிடையே இந்த தடையை இந்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்க பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து