முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.640 கோடிக்கு ஏலம் போன முயல் சிலை

வியாழக்கிழமை, 16 மே 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவில் தூய எஃகினால் வடிவமைக்கப்பட்ட 33 ஆண்டுகள் பழமையான முயல் சிலை 640 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தது.

அமெரிக்க கலைஞரான ஜெப் குருஸ் என்பவர் 1986-ம் ஆண்டு வடிவமைத்த இந்த முயல் சிலை 104 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாகும். முகம் இன்றி கையில் கேரட்டை பிடித்தவாறு நிற்கும் இந்த முயல் சிலை தான் தற்போது அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. 91.1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய்க்கு இந்த முயல் சிலை ஏலம் எடுக்கப்பட்டது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டிஷ் ஓவியர் டேவிட் ஹாக்னி ஓவியம் 634 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை ஜெப் குருஸின் முயல்சிலை முறியடித்துள்ளது. ஏலம் எடுத்தவரின் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் வாழும் கலைஞர் ஒருவரின் கலைப்படைப்பு இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்டது பெரிய சாதனை என கிறிஸ்ட்டிஸ் ஏலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து